தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 2004 திசம்பர் மாதம் ,நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11, அன்று, மக்களவையிலும், 2005 மே 12, அன்று மாநிலங்களவை}மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005 சூன்15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. 2005 சூன் 21, அன்று அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு 2005 அக்டோபர் 12, அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். ஒவ்வொரு நாளும், 4800க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டம் தொடங்கிய முதல் பத்து ஆண்டுகளில் 17,500,000 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஒரு “பொது அதிகாரம்” (அரசாங்க அமைப்பு அல்லது “அரசின் கருவி”) அமைப்பிலிருந்து தகவல்களைக் கோரலாம். உடனடியாகவோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பொது அதிகாரமும் தங்கள் பதிவுகளை பரந்த அளவில் பரப்புவதற்கும், சில வகை தகவல்களை முன்கூட்டியே கணினிமயமாக்குவதற்கும் இந்த சட்டம் தேவைப்படுகிறது, இதனால் குடிமக்களுக்கு முறைப்படி தகவல்களைக் கோர குறைந்தபட்ச உதவி தேவைப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் 1923 மற்றும் பல்வேறு சிறப்புச் சட்டங்களால் இந்தியாவில் தகவல் வெளிப்பாடு தடைசெய்யப்பட்டுள்ள தகவல்கள் கோர வழியில்லை. தகவல் உரிமை என்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை குறிக்கிறது. தகவல் உரிமைச் சட்டம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post