கிமு 1 – சீன ஆன் மரபு பேரரசர் ஆய் முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார்.
963 – பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார்.
1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
1652 – முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் டி ருய்ட்டர், சியார்ச் ஐசுக்கியூ ஆகியோரின் கடற்படைகள் போரில் ஈடுபட்டன.
1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றனர்.
1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கத் தளபதி வில்லியம் அல் டிட்ராயிட் கோட்டையை எவ்வித எதிர்ப்பும் இன்றி பிரித்தானியப் படைகளிடம் கையளித்தார்.
1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குதிரைப்படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.
1841 – அமெரிக்கத் தலைவர் ஜான் டைலர் அமெரிக்காவின் இரண்டாவது வங்கியை அமைப்பதற்கு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை விதித்தார். விக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் முன் வரலாறு காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
1856 – இலங்கையில் ரெயில்வே சட்டம் சட்டவாக்கப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
1858 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் புகேனன் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐரோப்பாவுடனான தந்திச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.
1863 – டொமினிக்கன் குடியரசில் எசுப்பானியா மீண்டும் தனது குடியேற்றத்தை ஆரம்பித்ததை அடுத்து, அந்நாட்டின் இராணுவத் தலைவர் கிரிகோரியோ லுப்பெரோன் டொமினிக்கன் குடியரசின் கொடியை ஏற்றி டொமினிக்கன் மறுசீரமைப்புப் போரை ஆரம்பித்தார்.
1869 – பரகுவை போர்: சிறுவர்களைக் கொண்ட பரகுவைப் படைப்பிரிவினரை பிரேசில் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
1891 – ஆசியாவிலேயே உருக்கினாலான முதலாவது தேவாலயம், சென் செபஸ்தியான் பேராலயம், மணிலாவில் திறந்து வைக்கப்பட்டது.
1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியா தனது 13 நாள் முற்றுகையை நிறுத்தியதை அடுத்து எலாண்ட்சு ஆற்று சமர் முடிவுக்கு வந்தது. இச்சமர் 2,000 முதல் 3,000 பூவரக்ள் 500 ஆத்திரேலிய, உரொடீசிய, கனடிய, பிரித்தானியக் கூட்டுப் படைகளை சுற்றி வளைத்ததை அடுத்து ஆரம்பமானது.
1906 – சிலியில் 8.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.
1918 – செக்கோசிலோவாக்கியப் படையினருக்கும் சோவியத் செஞ்சேனைக்கும் இடையில் பைக்கால் ஏரியில் போர் இடம்பெற்றது.
1920 – உசுபெக்கிசுத்தான், புகாரா கம்யூனிசுடுக் கட்சியின் மாநாட்டில் ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.
1920 – போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.
1923 – அந்தாட்டிக்காவில் தாம் உரிமை கோரிய நிலத்துக்கு ஐக்கிய இராச்சியம் ரொஸ் சார்புநிலம் எனப் பெயரிட்டு அதன் நிருவாகத்தை நியூசிலாந்து ஆளுநரிடம் கையளித்தது
Discussion about this post