உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் CEO எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்த நிலையில் பல பிரச்சனைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் முடக்கப்பட்டது.
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ள வேளையில் எலான் மஸ்க் என்ன செய்வது எனத் தெரியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தான் மீண்டும் மிகப்பெரிய தொகைக்கு டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
டிவிட்டர்
டிவிட்டரை கைப்பற்றும் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் முடக்கப்பட்ட இதற்காக வழக்கு நடந்து வரும் வேளையில் திடீரென டெஸ்லா பங்குகளை விற்பனை செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும், ஆனால் முடியவில்லை என எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு டிவிட்டருக்குச் சாதமாக இருப்பது மட்டும் அல்லாமல் எலான் மஸ்க்-கிற்குப் புலி வால் பிடித்த கதை என விமர்சனம் செய்து வருகின்றனர்.
எலான் மஸ்க் :
இந்த நிலையில் சட்ட ஆலோசகர்கள், எலான் மஸ்க்-யிடம் டிவிட்டர்-க்கு எதிரான வழக்கில் தோல்வி அடையும் பட்சத்தில் டிவிட்டரை கைப்பற்ற வேண்டிய நிலை வரும் இல்லையெனில் அதிகப்படியான தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். இவ்விரண்டுக்கும் அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்க வேண்டியது கட்டாயமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 25 ஒப்பந்தம் ரத்து :
எலான் மஸ்க் – டிவிட்டர் மத்தியில் செய்யப்பட்ட ஏப்ரல் 25 ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் டிவிட்டர் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை அக்டோபர் 17ஆம் தேதி நடக்க உள்ளது.
Discussion about this post