விந்தணு மற்றும் கருமுட்டை இல்லாமல் கருவை உற்பத்தி செய்தது மட்டுமின்றி, வரும் காலங்களில் இன்னும் பல நன்மைகளை அடையக்கூடிய கரு தயாரிப்பு நுட்பத்தை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது.
இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கரு முட்டைகளோ, விந்தணுகளோ இல்லாமால் செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர். குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன்-விட்ரோ கருத்தரித்தல், அதாவது IVF-(In vitro fertilization)நம்பிக்கையாக வந்தது. இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு தயாரிக்கப்படுகிறது. இப்போது தொழில்நுட்பம் இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டது. இதில், கருவைத் தயாரிக்க விந்தணுவோ கரு முட்டையோ கூட தேவையில்லை.
செயற்கை கருவின் இந்த புதிய தொழில்நுட்பம் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் முதல் செயற்கை கரு இஸ்ரேலின் ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. விந்தணு – கருமுட்டை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவின் ஆய்வு முடிவுகள் முற்றிலும் சாதகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வரும் காலங்களில் ஸ்டெம் செல்கள் உதவியுடன் மாற்று உறுப்புகள் உருவாக்குவதிலும், கரு தரிப்பு முறைகளிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
Discussion about this post