அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் “அண்ணா” என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரையின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010-ஆம் ஆண்டு செப்டெம்பர் 15-ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது..
3.75 லட்சம் சதுரடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரிவுகள் :
சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு
மெய்ப்புல அறைகூவலர் பிரிவு
நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு
குழந்தைகள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு
ஆங்கில நூல்கள் பிரிவு
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாகச் செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது.
Discussion about this post