ஒரு தெரு நாய் என்னோட அர டவுசர பாத்து தொரத்த ஆரம்பிச்சத்துதான் அங்க எடுத்த ஓட்டம் நேரா பார்க்ல வந்து மூச்சு முட்ட நின்னதும் ஒரு பத்து பேர் கூட்டமா நின்னு என்ன பாத்து சிரிச்சிட்டே இருந்தாங்க.
நான் என்னடா இது இன்னைக்கு ஊரே நம்மள பாத்து சிரிக்கிற மாத்திரி ஆகிட்டன் அப்படி என்ன நாம இன்னைக்கு வித்தியாசமா இருக்கோம்.
எனக்கு அர டவுசர் மேல சந்தேகம் வந்துஅது எங்கையாச்சு கிழிஞ்சு இருக்காங்கான்னு செக் பண்ணிட்டு நல்லாதான இருக்கு அப்பரம் ஏன் நாய் நம்மள தொரத்துது இவங்க நம்மள பாத்து சிரிக்கிறாங்க.
சந்தேகம் வந்து அவங்க பக்கத்துல போனதும் இன்னும் வேகமா சிரிக்க.
எனக்கு அப்போதான் தெரியுது நம்மள பாத்து சிரிக்கல, அவங்க சிரிப்பு தெரப்பி எடுக்கறாங்கனு .
ரொம்ப டயடு ஆச்சு இதுக்கு மேல முடியாது.
இப்படியே வீட்டுக்கு திரும்ப போனா ஹெல்த் வாட்சில கிலோ மீட்டர் பாத்துட்டு ஏன் பையன் ஏன் மனைவிக்கிட்ட போட்டு குடுத்துடுவான். அதுக்கு ஏதாவது பண்ணணுமேன்னு யோசிச்சிட்டு இருக்கும்போது பேப்பர் கார தம்பி அந்த பக்கம் வந்தான் அவன மடக்கி ஏய் தம்பி இங்க வா
பேப்பர் பாய் : என்ன சார்
நான் : நீ பாட்டுக்கு முகத்துல பேப்பர் வீசிட்டு போற யாரு இருகாங்கனுலாம் பாக்க மாட்டியா ?
பேப்பர் பாய் : சாரி சார் எல்ல இடத்துலயும் அப்டித்தான் வீசிட்டு போயிடுவான் இனி அப்படி நடக்காம பாத்துக்கறேன்.
நான் : சரி நீ இப்போ எங்கலாம் போவ
பேப்பர் பாய் : இங்க இருந்து நாலு ஏரியா சுத்திட்டு திரும்ப பேப்பர் ஆபிஸ் போயிட்டு வீட்டுக்கு போயிடுவான் சார்.
நான் : சரி எனக்கு ஒரு உதவி பன்னு.
பேப்பர் பாய் : சொல்லுங்க சார்.
நான்: இந்தா இத சட்ட பையில வாசிக்க திரும்ப உன் வேல முடிஞ்சதும் இங்க வந்து கொடுத்துட்டு ஹெல்த் வாட்சை கொடுத்தேன்.
பேப்பர் பாய் : சரி சார். என்னோட போன் நம்பர் எதுக்கும் வச்சிக்கோங்கனு போன் நம்பர கொடுத்துட்டு போய்ட்டான்
தொடரும்….
Discussion about this post