அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவுச்சி..என் பொண்டாட்டி வந்து ஏழுப்புனா…
டாக்டர் நடைபயணம் போகணும்னு சொல்லிட்டாரு
நீண்ட நாட்களுக்கு பிறகு நடையை கட்டலாம்னு முடிவு செஞ்சி ரொம்ப சீக்கரமா எழுந்த உணர்வு. பெட் காபி குடிப்பது வழக்கம் அன்று மனைவி டம்ளரை நீட்டியதும் வாங்கி வைத்து விட்டு முகத்தையும் , வாயையும் கழுவிக்கொண்டு டம்ளரில் இருப்பதை எடுத்து குடித்தவுடன், என்னது காபி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி லேசா உப்பா இருக்கு இனிப்பே இல்லையேனு முகத்தை துடைத்து கொண்டிருந்த துண்டை விளக்கி பார்த்ததும் தான் தெரிந்தது. அது அருகம்புள் ஜூஸ். மனைவியை பார்த்து என்னது என்று கேட்டதும்
மனைவி : நேத்தி டாக்டர் உங்களுக்கு சுகர்ன்னு சொன்னாங்கள்ல அதான் இனி காபி இல்ல. காலைல இதான்
நான் : இதெல்லாம் ஆடு மாடு தண்டி சாப்பிடும்.
மனைவி :எங்களுக்காக நீங்க மாடா உழைக்கிறீங்கனு அடிக்கடி சொல்லுவீங்கல்ல அப்போ மாடு சாப்பிடறது தான் சாப்பிடணும் குடிங்க.
நான் : இப்போ மாடு சாப்பிடறது அடுத்து லாடம் கட்டுவ, அப்ரம் முழுசா மாடா மாத்தாம விட மாட்ட போல அப்படியே பொலம்பிட்டு அருகம்புல் ஜூஸ குடிச்சிட்டு அரை டவுசரோடை வெளிய வந்ததும் பேப்பர்கார தம்பி சைக்கிள் வந்த வேகத்துல பேப்பர் ஏன் முகத்தில் அடிச்சுது.
பேப்பர் எடுத்து யாருன்னு பாக்கறதுக்கு முன்னாடி தம்பி சிட்டா பறந்துட்டான், சரி சீக்கரம் எந்திரிச்சிட்டோம் போடி நடையா நடந்து போகலாம்னு தெருவா தாண்டி தான் போயிருப்பன் வாக்கிங் ரன்னிங்கா மாரிடிச்சி
தொடரும்..
Discussion about this post