ப்ளூ சட்டை என்ற குறும்பட விழாவில் இயக்குனர் பேரரசுவுக்கும், நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ப்ளூ சட்டை என்ற குறும்பட விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கடுமையாக விமர்சனம் செய்பவரின் நாக்கை அறுப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. அதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது கண்டனத்தை தெரிவித்தார். கடுமையாக விமர்சிப்பது தவறு தான் என்றாலும், அதற்காக நாக்கை அறுப்பது போன்ற காட்சி வைக்கலாமா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய இயக்குனர் பேரரசு, நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன். இயக்குனராக 5 வருடங்கள் ஆனது. மொத்தம் அந்த 15 வருடங்களில் என்னால் ஊருக்குக் கூட போக முடியவில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் இயக்கி அது வெளிவரும்போது கடுமையாக தாக்கி, வா போ என தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால், ஒரு புது டைரக்டரின் மனம் என்ன பாடு படும் என்றார்.
அதோடு கடுமையான சொற்களால் தாக்கி எழுதுபவர்கள், தங்கள் சொந்தக் காசில் படம் பார்த்து எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக் கூடாது என்றும் குறிப்பிட்டார். குறும்பட விழாவின் நோக்கம் மறந்து, சூழல் வேறு பாதையில் செல்வதை உணர்ந்த ஜாகுவார் தங்கம், திடீரென மேடையில் இருந்து இறங்கி வெளியேறினார்.
இறுதியில் இறுக்கமான சூழலில் ப்ளூ சட்டை பட விழா முடிவடைந்தது.
Discussion about this post