சிஎஸ்கே அணியிலிருந்து ஜடேஜா விலகி விடுவார் என்ற ஊகம் ஏறக்குறைய உறுதி பெற்றுவிட்டதாகவே நம்பப்படுவதால் அடுத்து ஜடேஜாவை எந்தெந்த அணிகள் வாங்கும் வாய்ப்புள்ளது என்ற ஊடக ஊகங்களும் வெளியாகி வருகிறது.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று ரவீந்திர ஜடேஜா ஒரு சூப்பர் ஸ்டார். சிஎஸ்கே நிர்வாகம் இவரை அனாவசியமாகக் கேப்டனாக்கி, பிறகு வெறும் டாஸ் போட மட்டுமே தான் கேப்டனா என்று அவர் தன் கேப்டன்சி காலத்தை நினைத்துவிடக்கூடாது என்று அவர் கேப்டன்சி செய்யவில்லை, தோனிதான் செய்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி கடைசியில் இந்த நாடகத்தின் இறுதிக்காட்சியில் தோனி மீண்டும் கேப்டனாகி விட்டார்.
இதில் ஜடேஜா பயங்கரக் கடுப்பாகியிருக்கலாம், அல்லது மனவேதனை அடைந்திருக்கலாம் இதனால் அவர் இனி சிஎஸ்கேவுக்கு ஆட மாட்டார் என்ற வதந்திகள் எழுந்தன, அதற்கேற்றார் போல் அவரும் தனக்கும் சிஎஸ்கேவுக்குமான உறவை கேள்விக்குட்படுத்துமாறு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியது இன்னும் பெரிய ஊகங்களுக்கு இட்டுச் சென்றன.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்று சிஎஸ்கேவுடன் ஜடேஜாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. எனவே ஜடேஜாவை பிடித்துப் போட 3 ஐபிஎல் அணிகள் காத்திருக்கின்றன.
இதில் முதன்மையாக ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
டு பிளெசிஸ் சிஎஸ்கேவுக்கு ஆடும்போது ஜடேஜாவுடன் நல்ல பழக்கம் உள்ளவர், ஜடேஜாவை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தவர். ஆர்சிபிக்கு ஜடேஜா போன்ற மேட்ச் வின்னர்கள் தேவை.
இன்னொரு அணி மும்பை இந்தியன்ஸ், இந்த அணி கடந்த ஐபிஎல் சீசனை மறந்து விட வேண்டியதுதான், அந்த அளவுக்கு மோசமாக ஆடியது, மும்பை இந்தியன்சுக்கு ஒரு பினிஷர் தேவை, முக்கியமாக ஜடேஜா போல் ஒரு பீல்டர் தேவை எனவே ஜடேஜாவை மும்பை இந்தியன்ஸ் வாங்க வாய்ப்புள்ளது.
இன்னொரு அணி ஜடேஜாவுக்காக பார்க்க வாய்ப்புள்ள அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா அணியில் சுனில் நரைன் இருக்கிறார், ஆந்த்ரே ரஸல் உடன் ஜடேஜாவும் சேர்ந்தால் ஆல்ரவுண்டகள் அணியாக கொல்கத்தா இருக்கும்.கொல்கத்தா பிட்சும் ஜடேஜா பாணி பவுலிங்குக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவரை பிடித்துப் போட இந்த 3 அணிகள் காத்திருக்கின்றன.
Discussion about this post