பால், சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு, மசாலா போன்ற உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது போய் இப்போது, காய்கறிகளிலும் கலப்படம் என்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. அதிலும் உண்மையான மற்றும் போலி உணவுப்பொருட்களை கண்டறிவது மிகவும் கடினமாகிவிட்டது. அதிலும் புதிய பிரெஷான கீரையின் இலைகள், பச்சை காய்கறிகள் என்று வரும்போது அவை உண்மையில் கலப்படமற்றவையா என்பதை கண்டறிவது மிக மிக கடினம்.
சில செய்முறைகளை செய்வதன் மூலம் நாம் இப்போது கலப்படம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் கலப்படமில்லாத காய்கறிகளை வேறுபடுத்த முடியும். சரி அதற்கு முன்பு இந்த கெமிக்கல் பற்றி தெரிந்து கொள்வோம்.
மலாக்கைட் க்ரீன் என்றால் என்ன?
மலாக்கிட் க்ரீன், அனிலைன் க்ரீன், பென்சால்டிஹைட் க்ரீன் அல்லது சீனா க்ரீன் என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கிருமி நாசினிக்கான நீர்த்த கரைசலில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு அவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கெமிக்கல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மலாக்கிட் பச்சை நிறத்தின் மோசமான விளைவுகளை பற்றியும் FSSAI ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. மேலும், காய்கறிகளில் இந்த கெமிக்கல் கலவை இருக்கிறதா என்பதை கண்டறியும் வழியையும் விளக்கியுள்ளது.
FSSAI வெளியிட்ட வீடியோ ஒரு எளிய சோதனையை நடத்த பரிந்துரைக்கிறது. அதில், திரவ பாரஃபினில், ஒரு துண்டு காட்டனை நனைத்துக்கொண்டது. மேலும் மலாக்கிட் பச்சை கலக்கப்பட்ட வெண்டைக்காயையும், எந்த கலப்படமும் உள்ளதா அசல் வெண்டைக்காயையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டனர்.
இப்பொது திரவ பாரஃபினில் நனைக்கப்பட்ட காட்டனை எடுத்து கெமிக்கல் கலக்காத வெண்டைக்காயில் தேய்த்துள்ளனர். காட்டன் எந்த நிறத்திலும் மாறவில்லை. அதுவே, கெமிக்கல் கலந்த வெண்டைக்காயில் காட்டனை தேய்த்த போது அது பச்சை நிறத்தில் மாறியது. இதன் மூலம், காய்கறிகள் கலப்படம் நிறைந்ததா என்பதை எளிதில் கண்டறியலாம்.
Discussion about this post