(PSLV)
பெரிய அளவிலான செயற்கை கோள்களை கொண்டு செல்ல பயன்படுத்துவதே GSLV / PSLV ராக்கெட்டுகள் 4000 கிலோ வரையிலான கொள்ளளவு கொண்டது இவை. 110 டன் எடை கொண்ட இந்த SSLV,500 கிலோ வரையில் கொள்ளளவு திறன் கொண்டது. SSLV யின் மொத்த பட்ஜெட் 30 கோடி மட்டுமே.இந்த SSLV -யின் நோக்கம் EOS-02 செயற்கை கோளையும், AzaadiSAT என்கின்ற செயற்கை கோளினையும் புவி சுற்று சூழல் கண்கானிப்பிற்க்காக பூமியின் லோயர் எர்த் ஆர்பிட்
(Lower Earth Orbit)ல் 500 கிலோ மீட்டருக்கும் குறைவான துரத்தில் நிலை நிறுத்துவதே ஆகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள (Sathish Dhawan Space Center)யில் இருந்து சரியாக 07.08.2022 காலை 9.18 ற்கு SSLV ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தனது 3 நிலையை துல்லியமாக கடந்த SSLV (VTM) Velocity Trimming Module பகுதியில் பழுது ஏற்பட்டதாலும் FDI-Failure Deduction and Isolation மென்பொருளில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே தனது நான்காவது சுற்றுவட்டப் பாதையிலிருந்து அகன்று நீள் வட்டப்பாதைக்கு சென்று புவி ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு கடலில் விழுந்து செயலிழுந்தது. சென்சார் செயலிழந்ததே இதற்க்கு காரணம் என்று இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதன் முழு தகவல்களையும் FAC(Failure Analysis committee) விரைவில் அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Salvage Action மென்பொருள்எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மூலமாக விபத்திற்கு பின் 5 மணி நேரத்திலேயே அனைத்து தகவல்களையும் பாதுகாப்பாக பூமிக்கு அனுப்பியதால் பழுது ஏற்பட்டதின் காரணம் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டபணி தோல்வியடைந்தாலும் இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டிருந்ததையும் தோல்வியின் காரணத்தையும் சுருக்கமாக விளக்கியுள்ளார் இஸ்ரோ தலைமை விஞ்ஞானியான திரு.சோமநாத் .அடுத்தகட்டமான SSLV-D2 தயாராகி வருவதையும் விரைவில் அதற்கான பனி துவங்கும் என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post