அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய எதிர்பார்ப்பே இன்றைய முக்கிய செய்தி. முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக சீனியர்கள் நேற்று (6-ம் தேதி) பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். மூத்த அமைச்சர்கள் பலரும் முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பல கட்டமாக சந்தித்து பேசினர்.
இன்று காலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும்’ என்றார். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், இதரக் கட்சியினரும் அதிமுக.வின் வியூகத்தை இந்த விஷயத்தில் கவனித்து வருகிறார்கள்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, ஆகியோரின் அன்பு தொண்டர்கள் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பான வணக்கம்
ஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி பூத்துக் குலுங்குகின்ற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.
உழவன் வீட்டில் உதித்த ஒருவனும் உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமை சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்கள் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது இதற்காக் என் ஆயுளின் கடைசி வினாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.
Discussion about this post