எஸ்.பி.பி.யின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவர் எழுந்து அமர்ந்திருந்ததாகவும் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எஸ்.பி.பி.உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று ஏராளமான ரசிகர்களும், திரைத்துறையினரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post