ஐ.பி.எல் சீசனின் 4-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ்வென்ற சி.எஸ்.கே பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 216 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து சென்னை அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை தொடங்கிய முரளி 21 ரன்களிலும், வாட்சன் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டாவதாக இறங்கிய டூப்ளிஸிஸ் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார்.
மறுபுறம் கேப்டன் தோனி, கடைசி ஓவரில் மட்டும் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இருப்பினும், 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Discussion about this post