நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் சென்னை பாரி முனையில் போராட்டம் நடத்தினர்.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மாநகர காவல் பேருந்தில் ஏற்றி செல்லப்பட்டனர். தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் இதுகுறித்து தெரிவிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. விவசாய நலன்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேற காரணமாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும்.
அரசு கொள்முதல் செய்யாவிட்டால் ரேஷன் கடைகள் இயங்காது. ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காது.
Discussion about this post