அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியல் மும்பை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி வீழ்த்தியது.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக சவுரப் திவாரி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில், லுங்கி நிகிடி 3 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
தையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், முரளி விஜய் களமிறங்கினர். வாட்சன் 4 ரன்னிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். சி.எஸ்.கே 6 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அம்பாதி ராயுடு மற்றும் டூ-பிளெசிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஒருபுறம் அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாட மறுபுறம் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்தனர். அம்பாதி ராயுடு 48 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 71 ரன்கள் குவித்து அவுட்டானார். அம்பாதி ராயுடுவின் அதிரடியான ஆட்டத்தால் சி.எஸ்.கே அணி எளிதாக வெற்றி இலக்கை எட்ட முடிந்தது.
இறுதியாக சி.எஸ்.கே 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. புள்ளிப்பட்டியலில் வெற்றி கணக்குடன் உள்ளே நுழைந்துள்ள சி.எஸ்.கே அணி முதலிடத்தில் தற்போது உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் மோத உள்ளன.
Discussion about this post