கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பெரும் பரபரப்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஐ.பி.எல் 13-வது சீசன் இன்று தொடங்கியது. அபுதாபயில் தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மாலையில் பனிப்பொழிவு இருப்பதால் முதலில் பந்துவீசுவது எளிதாக இருக்கும் என்று தோனி கூறினார்.
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி-காக் களமிறங்கினார். முதல் ஓவரை வீசிய சி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா பவுண்டரி விளாசி அதிரடியை ஆரம்பித்தார்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக சவுரப் திவாரி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில், லுங்கி நிகிடி 3 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஐ.பி.எல் தொடரின் முதல் வெற்றியை சி.எஸ்.கே பதிவு செய்ய 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
Discussion about this post