இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இயக்குனர் சஞ்சய் திரிபாதி எழுதி இயக்க, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இதில் தற்போது லைகா நிறுவனமும் இணைந்துள்ளது. இப்படத்திற்கான தமிழ் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இந்த படத்திற்கு ‘கர்மயோகி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லைகா நிறுவனம், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, இப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
As mark of it’s love and respect for the Prime Minister Shri @narendramodi ji on his 70th birthday @LycaProductions is Privileged to present ‘Karmyogi’ -Tamil along with legendary film-maker #SanjayLeelaBhansali produced by #MahaveerJain directed by #SsanjayTripaathy #HBDDearPM pic.twitter.com/5tv8nHC1DJ
— Lyca Productions (@LycaProductions) September 16, 2020
பிரதமர் மோடியின் ஆரம்ப கட்ட காலங்கள் மற்றும் இளம் பருவத்தை சித்தரிக்கும் வகையில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post