பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் இன்று பாஜகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மிக எளிய குடும்பத்தில் பிறந்து குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தவர் நரேந்திர மோடி.
2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அப்போது எழுந்த மோடி அலை, தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சுனாமியாக மாறி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தது.
இரண்டாவது முறையாக 2019-இல் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்ததில் மோடி பங்கு முக்கியமானது. அரசியலை தவிர எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர் மோடி, அவர் எழுதி இதுவரை 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் திறனும், வென்று காட்டும் அர்ப்பணிப்பும்தான் பிரதமர் மோடியின் வெற்றிக்கு அடிப்படை.
Discussion about this post