தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியநிலையில், மார்ச் மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் கூடவிருக்கிறது. தற்போதுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் போதிய இட வசதி இல்லாததால் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கடந்த 8-ந் தேதியன்று சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் சட்டசபையை நடத்த முடிவு செய்யப்பட்டது.
எனவே, கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. பேரவை கூட்டம் கூட்டப்படும் நாள் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
Discussion about this post