சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த குமார், ஸ்டூடியோவில் கேமராமேனாக பணியாற்றி வந்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே ஐய்யர் கண்டிகை கிராமத்தில் ஏ ஆர் ரகுமானின் பண்ணை வீட்டில் அமைந்த ஏ ஆர் பிலிம் சிட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சி, ஐய்யர் கண்டிகை கிராமத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஏ ஆர் ஃபிலிம் ஸ்டுடியோ அமைந்துள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் வெப்பம் திரைப்படம் எடுப்பதற்காக பணியாளர்கள் 2 நாள் முழுவதும் ஃபிலிம் ஸ்டுடியோவில் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ஸ்டூடியோவில் கேமராமானாக பணியாற்றி வரும் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குமார் (47) என்பவர் இன்று காலை சுமார் 30அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.
இதை அறிந்த சக ஊழியர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக் கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Discussion about this post