ரேடியோ சிக்னல்கள் பயன்படுத்தி தகவல்களை வயர்லஸ் மூலம் பரிமாற்றம் செய்வது போலவே, LED விளக்குகளில் இருந்து லைட்டை ஒரு நொடிக்கு ஒரு மில்லியன் முறை ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும் என்று கூறிகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தொழில்நுட்பத்தில் அடுத்து என்ன, பறக்கும் கார், கண்ணிமைக்கும் நேரத்தில் பல மைல்கள் பயணம் செய்யும் அதிவேக ரயில், மிதக்கும் வாகனங்கள், என்று அடுத்தடுத்து ஃபேண்டசி திரைப்படங்களில், கதைகளில் படித்ததெல்லாம் நிஜமாகி கொண்டு வரும் வேளையில், மனித உடலிலிருந்தே சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என்ற புதிய கண்டுபிடிப்பை பற்றி ஆய்வாளர்கள் தகவல் அறிவித்துள்ளார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறப்படும் அளவுக்கு பலவிதமான மாற்றங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தான் இந்தியாவில் 5ஜி, அதிவேக இன்டெர்நெட் கனெக்டிவிட்டியாக நாடு முழுவதும் பல முக்கியமான இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி, 4ஜி என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே 5ஜி தொழில்நுட்பம் பற்றிய அறிவிப்பு மேற்கொண்டு அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன.
அதேபோல தற்போது 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்த தொடங்கியதில் இருந்தே 6ஜி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் ஆச்சரியமான, அதிசயத்தக்க கூடிய விஷயம் என்னவென்றால் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனித உடலிலிருந்தே சார்ஜ் செய்யலாம் என்று கூறப்படுகிறது! இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மஸ்ஸாச்சுசெட்ஸ் அம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் இதைப் பற்றிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் மனித உடலில் இருந்து உற்பத்தியாகி, வீணாக இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி பலவிதமான சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என்று சாத்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 6ஜி டெலிகாம் விசிபிள் லைட் கம்யூனிகேஷன் என்ற சாத்தியக்கூறின் அடிப்படையில் இது மிகப் பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உடல் ஒரு ஆண்டனாவைப் போல செயல்படுமாம். இதை பயன்படுத்தி பல விதமான சாதனங்கள், வேரியஸ் டிவைஸ்கள் மட்டுமல்லாமல் எலெக்ட்ரானிக் சாதனங்களை கூட சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. எவ்வாறு பைபர் ஆப்டிக்ஸ் வயர்லஸ் சாதனங்களில் இருக்கும் லைட்டை ஃபிளாஷ் செய்து தகவல்களை டிரான்ஸ்மிட் செய்ய முடிகிறதோ அதேபோல மனித உடலிலிருந்து சார்ஜ் செய்ய முடியும்.
இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளரான, உமாஸ் அம்ஹெர்ஸ்ட் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் துறையின் பேராசிரியரான ஜிய் சியாங், ‘இது மிகவும் எளிதுதான், ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது’ என்று தெரிவித்துளார்.
ரேடியோ சிக்னல்கள் பயன்படுத்தி தகவல்களை வயர்லஸ் மூலம் பரிமாற்றம் செய்வது போலவே, LED விளக்குகளில் இருந்து லைட்டை ஒரு நொடிக்கு ஒரு மில்லியன் முறை ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, VLC உலகம் முழுவதும் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, LED விளக்குகள் உள்ள வீடுகள், வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் தெரு விலக்குகள் என்று எல்லாவற்றிலும் இருந்து டேட்டா பரிமாற்றம் நிகழ்வும். கேமரா உள்ள எந்த சாதனத்தையும் சார்ஜ் செய்ய முடியும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதனை சோதித்துப் பார்க்க காப்பர் வயர் பயன்படுத்தி ஒரு பிரேஸ்லெட்டையும் தயார் செய்துள்ளனர். பல முறை, பல விதமான வயர்கள் மற்றும் டிசைன்களில் சோதனை செய்து வந்துள்ளனர். அட்டை, இரும்பு, மரம் என்று பல மேற்பரப்புகளில் சோதித்துப் பார்த்தாலும், மனித உடல் தான் சிறந்த மீடியமாக இருக்கிறது என்று மனித உடலில் இருந்து LED ஒளியின் மூலம் சார்ஜ் செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
Discussion about this post