இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் வெற்றிபெறும் போட்டியாளர் நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் மணிகண்டன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து மீதம் உள்ள 8 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக ஏடிகே தேர்வான நிலையில் வீட்டில் உள்ள விக்ரமன், அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன் ஆகிய 8 பேரும் இந்த வார எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் வெற்றிபெறும் போட்டியாளர் நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பப்படுவார்கள். இதற்காக வீட்டில் உள்ள 8 ஹவுஸ்மேட்களும் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் 88-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
அதில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ் 8 அறிவிக்கப்படுகிறது. அந்த டாஸ்க் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒன் அண்ட் ஒன் போட்டியிடவேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, அமுதவாணன் விக்ரமனுடனும், மைனா நந்தினி கதிருடனும் போட்டியிடுவதாக தெரிவிக்கிறனர். அப்போது அசீம் ஷிவினிடம் நாம ரெண்டு பேரும் விளையாடலாம் என்று அழைக்க அதற்கு ஷிவின் மறுப்பு தெரிவிக்கிறார்.
Discussion about this post