பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜிக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Discussion about this post