காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.
47 வயதான திருமகன் ஈவெரா நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மருத்துவமனையிலேயே காலமானார்.
இதை தொடர்ந்து ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.
Discussion about this post