திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலாளராக கனிமொழி ஆகியோரும், முதன்மைச் செயலாளராக கே.என்.நேருவும் உள்ளனர். இதற்கடுத்து முக்கியப் பொறுப்பான திமுக அமைப்புச் செயலாளர் பதவியில் ஆர்.எஸ். பாரதியும், துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
Discussion about this post