ஜனவரி 11-ஆம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் ஆர்ஆர்ஆர் குழுவினர் கலந்துக் கொள்கின்றனர்.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்கு இரண்டு பரிந்துரைகளை பெற்றது. இந்த விருது வழங்கும் விழா ஜனவரி 11, 2023-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. விருது வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாட்டு நாடு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் மற்றும் RRR சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என இரு பிரிவுகளில் கோல்டன் குளோப்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் உலகம் முழுவதும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் உலகளவில் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 2023 ஆஸ்கார் விருதுகளுக்கு இப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டது.
கோல்டன் குளோப்ஸ் 2023 ஆஸ்கார் விருதுக்கு முன் நடக்கும் முக்கிய விருது விழாவாகக் கருதப்படுகிறது. ஜனவரி 11-ஆம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் ஆர்ஆர்ஆர் குழுவினர் கலந்துக் கொள்கின்றனர். கோல்டன் குளோப்ஸ் 2023 ஜனவரி 11-ஆம் தேதி பெவர்லி ஹில்டனில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
Discussion about this post