அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜெர்மி ரென்னர் பன் குவியலை அகற்றும்போது விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
நடிகர் ஜெர்மி ரென்னர் புத்தாண்டு தினத்தில் பனிக்குவியலை அகற்றும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, “நெஞ்சு வலி மற்றும் எலும்பியல் காயங்களுக்கு” ஆளானார் என்று அவரின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை மாலை தெரிவித்தார். ரென்னருக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்தில் ஏற்பட்ட காயங்களை சரி செய்ய ரென்னருக்கு இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் CNN ஊடகத்திடம் கூறியது. “அவரது காயங்கள் பெரிது” என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ரென்னர் நெவாடாவில் காயமடைந்த பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது 51 வயதாகும் ஜெர்மி ரென்னர் பல மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படங்களில் நடித்துள்ளார். Mission: Impossible – Ghost Protocol, The Avengers, Mission: Impossible – Rogue Nation, Avengers: Age of Ultron, Captain America: Civil War, Avengers: Endgame உள்ளிட்ட பல படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை.
Discussion about this post