சுபஶ்ரீ இறந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம், நுரையீரலில் நீர் இறங்கியுள்ளது, அவரது உடலில் எவ்வித காயங்களும் இல்லை – உடற்கூறு ஆய்வறிக்கையில் தகவல்
கோவை ஈஷா யோக மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான சுபஶ்ரீ என்ற பெண்ணின் உடல் செம்மேடு பகுதியில் பாழடைந்த கிணற்றில் சடலமாக இன்று மீட்கப்பட்டது.
பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்விற்கு கொண்டுவரப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
உடற்கூறு ஆய்வு அறிக்கையில், சுபஶ்ரீ இறந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும், நுரையீரலில் நீர் இறங்கியுள்ளதாகவும், அவரது உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கோவை நஞ்சுன்டாபுரம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post