லடாக்கில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. இந்தியா துப்பாககி சூடு நடத்தியதாக சீனா கூறியது. ஷென்போ மலைப்பகுதியை இந்தியா அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. படைகளை திரும்ப பெறவும், நிலைமையை சரி செய்யவும் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்திய படையை தூண்டும் வகையில் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஆனால் சீனா இப்படி இந்தியாவும் சீண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்தியா திரும்பி சுடவில்லை. இந்தியா எல்லையில் அமைதி காத்தது. இந்திய ராணுவம் ஒப்பந்தத்தை மீறாமல் அமைதியாக இருந்தது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியா உறுதியாக இருக்கிறது . அதே சமயம் இந்தியாவை பாதுகாக்கவும் நாங்கள் உறுதி பூண்டு இருக்கிறோம், என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.
Discussion about this post