சிவன் கோயில் திருவிழாவின்போது மோதிக்கொண்ட யானைகளால் அங்கு பரபரப்புக் காணப்பட்டது |
கேரளாவில் கோவில் திருவிழாவுக்கு இடையே மிரண்ட யானை ஒன்று தந்தங்களால் மற்றொரு யானையை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கிழக்காஞ்சேரி என்னும் பகுதியில் உள்ள திருவறா சிவன் கோவிலில் இன்று திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட மூன்று யானைகளில் ஒரு யானை திடீரென மிரண்டுள்ளது. மிரண்ட யானை அங்கிருந்த மற்றொரு யானை மீது திடீரென தந்தங்களால் கொடூரமாக தாக்கியுள்ளது.
அதுபோல கோவில் வளாகத்துக்குள் நறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது. ஒரு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பின்பு யானை அமைதியானது.
மிரண்ட யானை மற்றும் மற்றொரு யானையை தந்தங்களால் தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியும் வருகிறது.
Discussion about this post