இந்நிலையில் அன்லாக் செயல்முறையின் ஒரு அங்கமாக மீண்டும் போக்குவரத்து மறுதொடக்கம் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் குறிப்பிட்ட நகரங்களில் மெட்ரொ சேவை தொடங்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், டெல்லி, நொய்டா, சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை லைன் -1, ஜெய்ப்பூர், ஹைதராபாத், மகா மெட்ரோ (நாக்பூர்), கொல்கத்தா, குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் மெட்ரோ அதிகாரிகள் தங்களது நிலையான இயக்க நடைமுறைகளைத் தயாரித்துள்ளனர். மகாராஷ்டிரா இந்த மாதத்தில் மெட்ரோ செயல்பாட்டை மீண்டும் தொடங்காது என தெரிவித்துள்ளது.
மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன.
Discussion about this post