ஜியோ True 5G சேவை இனி Xiaomi, Redmi வகையின் குறிப்பிட்ட ஸ்மார்ட் போன்களில் கிடைக்கவுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் 6 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் தொடங்கியது. இப்போது, 15க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. கடைசியாக ஆந்திர பிரதேசத்தில் தனது 5ஜி சேவையை ஜியோ வழங்கியது.
இந்த நிலையில் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக Xiaomi நிறுவனம் தனது சில குறிப்பிட்ட ஸ்மார்ட் போன்களுக்கு ட்ரூ 5ஜி சேவை (True 5G) வசதியை ஏற்படுத்த உள்ளது. ஜியோவிடமிருந்து True 5G சேவையை பயன்படுத்துவதற்கான அழைப்பைப் பெற்ற பிறகு, Xiaomi மற்றும் Redmi-யின் சில ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் மொபைல்களில் True 5G சேவையை பெற முடியும்.
ஜியோ True 5G சேவையைப் பெற Xiaomi பயனர்கள் என்ன செய்ய வேண்டும்
* பயனர்கள் 5ஜி சேவை கிடைக்கும் இடத்திலோ அல்லது நகரத்திலோ இருக்க வேண்டும்.
* 5ஜி இணைப்பை பெற பயனர்கள் தங்களது மொபைலில் உள்ள MyJio app-ல் நோட்டிபிகேஷன் அல்லது அலர்ட் வருகிறதா என செக் செய்ய வேண்டும்
* தங்களது Preferred நெட்வொர்க்கின் Type-ஐ 5ஜிக்கு மாற்ற வேண்டும்
* பயனர்கள் தங்களது தற்போதைய சிம் கார்டுகளிலேயே ஜியோ 5ஜி சேவையை பெறலாம். புதிய சிம்மை பெறத் தேவையில்லை.
* ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.299க்கு மேல் இருக்கும் அனைத்து டேட்டா ப்ளான்களிலும் ஜியோ True 5G சேவை கிடைக்கும். எனவே, நீங்கள் புதிய ப்ளானுக்கு ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.
5ஜி சேவை கிடக்கும் ஸ்மார்ட் போன்கள் இவைதான்
Mi 11 Ultra 5G , Xiaomi 12 Pro 5G , Xiaomi 11T Pro 5G, Redmi Note 11 Pro+ 5G, Xiaomi 11 Lite NE 5G, Redmi Note 11T 5G, Redmi 11 Prime 5G, Redmi Note 10T 5G, Mi 11X 5G, Mi 11X Pro 5G, Redmi K50i 5G, Xiaomi 11i 5G, Xiaomi 11i HyperCharge 5G.
Discussion about this post