சென்னை எழும்பூர் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.
குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம ஆசாமி ஒருவர், காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் ஐந்தாவது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த டயானா என்ற மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடைபெற்றது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக சோதனை நடத்தினர்.
ரயில் பயணிகள் அனைவரும் மின்சார ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது உறுதியானது. இதன் காரணமாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post