மண்டல காலத்தின் இறுதி நிகழ்ச்சியான மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது.
சபரிமலையில் வரும் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவிருக்கிறது. அன்றைய நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலமாக இன்று ஆறன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது. வழிநெடுவே பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜைக்கு அணிவிக்க வழங்கப்பட்ட தங்க அங்கி ஊர்வலம் இன்று காலையில் தொடங்கி உள்ளது. மண்டல பூஜை நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் ஆறன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து தொடங்கியது. வரும் 26 அன்று மாலை தீபாராதனைக்கு முன்னதாக தங்க அங்கி ரத ஊர்வலம் சன்னிதானம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை ஆறன்முள பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய வைக்கப்பட்ட பின்பு ஊர்வலமாக புறப்பட்டது. வழி நெடுவே தங்க அங்கி ரத ஊர்வலத்திற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கார்த்திகை மாத பிறப்பு மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. தினசரியும் பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மண்டல காலத்தின் இறுதி நிகழ்ச்சியான மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.
26 ஆம் தேதி தங்க அங்கி பம்பையில் இருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு இடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். தொடர்ந்து 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து 27ம் தேதி அன்று மண்டல பூஜை நாளில் மதியம் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெறும்.
மண்டல பூஜை நாளில் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும் என கூறப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
Discussion about this post