- 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி.
- செப்டம்பர் 21-ஆம் தேதி முதல், 100 பேரைக்கொண்ட, கலாச்சார, பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி. திறந்தவெளி அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருக்க வேண்டும். கல்வி நிலையங்களில் 50 சதவீத ஆசிரியர்களை வரவழைத்து, ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம். கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத பகுதிகளில் உள்ள 9-ஆம் வகுப்பு முதல், 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செப்டம்பர் மாதம் முழுவதும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்கை மாநில அரசுகள் பிறப்பிக்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
- மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு, எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்குள் சென்று வருவதற்கு இ-பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனைகளும் இனி இருக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- ஊரடங்கு கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஊரடங்கு கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும்.
Discussion about this post