நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்டிருப்பது குறித்து கன்னட நடிகர்களான சிவ ராஜ்குமார், மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன் தற்போது கிராந்தி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விளம்பரப்படுத்தும் விதமாக கர்நாடகாவில் உள்ள ஹோஸ்பேட் என்ற ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் படத்தின் நாயகி ரச்சிதா ராமும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராம் பேசிக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த ஒருவர் தர்ஷன் மீது செருப்பை வீசியுள்ளார். அது அவரது தோள்பட்டையில் விழுந்துள்ளது. இதனையடுத்து பேசிய அவர், இது உங்களது தவறில்லை சகோதரா, எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார்.
முன்னதாக நடிகர் தர்ஷன், எப்பொழுதும் அதிர்ஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டமாட்டாள். அவள் தட்டும்போது அவளை இழுத்து அவளது உடையை அவிழுங்கள், நீங்கள் உடையைக் கொடுத்தாள் அவள் வெளியே சென்றுவிடுவாள் என்று பேசியிருந்தார். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
தர்ஷனின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே அவர் மீது செருப்பு வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்டிருப்பது குறித்து கன்னட நடிகர்களான சிவ ராஜ்குமார், மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post