அவதார் பட முதல் நாள் வசூல் சயின்ஸ் ஃபிக்சன் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை காட்டுகிறது. உலக அளவில் சிறந்த 10 சயின்ஸ் ஃபிக்சன் படங்களின் பட்டியலைக் காணலாம்.
1. அனிஹிலேஷன்
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை அலெக்ஸ் கார்லாண்டு இயக்கியிருக்கிறார். ஷிம்மரை ஆராயச் செல்லும் ராணவ வீரர்கள் காணாமல் போகிறார்கள். ரேடியா சிக்னல்கள் இல்லை. ஜிபிஎஸ் இல்லை. ஓராண்டுக்கு பிறகு கேன் என்பவர் மட்டும் திரும்பி வருகிறார். அவர் எங்கே போனார் அவருக்கு என்ன ஆனது போன்ற மர்மங்களுக்கு பதில் சொல்கிறது அனிஹிலேசன் திரைப்படம்.
2.தி காங்கிரஸ்
அனிமேஷன் படமான இதனை அரி ஃபோல்மேன் இயக்கியுள்ளார். பட வாய்யில்லாமல் தவிக்கும் ராபின் ரைட் என்ற நடிகை பணத் தேவை காரணமாக தன்னைப் போன்ற பிம்பத்த உருவாக்க ஒப்புக்கொள்கிறார். அதன் பின் நடப்பனவற்றை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறது.
3. தி டான் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் (The Dawn of the Planet of the apes)
ஹைட்ரோ எலக்ட்ரிக் டேமை தேடி வரும் மனிதர்கள் குரங்குகளின் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனர். அப்போது மனிதர்கள் மற்றும் குரங்களுக்குமே இடையேயான மோதலை சுவாரசியமான சம்பவங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.
4. எட்ஜ் ஆஃப் டுமாரோ (Edge Of Tomorrow) மிமிக்ஸ் என்ற ஏலியன்கள் ஜெர்மனிக்கு வருகின்றனர். அவர்களிடமிருந்து பூமியை மேஜர் வில்லியம் கேஜ் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. டவுக் லிமன் இயக்கியுள்ள இப்படத்தில் மேஜர் வில்லியம் கேஜாக டாம் க்ரூஸ் நடித்துள்ளார்.
5. கிராவிட்டி (Gravity)
விண்வெளியில் இருக்கும் வீரர்களின் ஸ்பேஸ் ஜெட் எதிர்பாராதவிதமாக பழுதடைகிறது. சான்ரா புல்லக் மட்டும் பிழைத்துக்கொள்கிறார். கடுமையான போராட்டத்துக்கு பிறகு எப்படி பூமி திருமினார் என்பதை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறது கிராவிட்டி.
6. ஹெர் (Her)
எதிர்காலத்தில் நடக்கும் கதை. ஜோக்குயின் ஃபீனிக்ஸ் தனிமையில் வசிக்கிறார். பிறருக்காக கடிதம் எழுதும் வேலையில் இருக்கும் ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ட் மூலம் உருவாக்கப்படும் ஆப் அவருக்கு கிடைக்கிறது. அந்த ஆப்பில் ஒரு பெண் குரல் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அவரது தனிமைக்கு மருந்தாக அமைகிறது. அந்த குரலை அவர் காதலியாக கருதத் தொடங்குகிறார். அதன் பின்னர் நடப்பது தான் படத்தின் கதை.
7. இன்டர்ஸ்டெல்லர்
கிரிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்தப் படம் ஸ்பெஷல் எஃபெக்சட்ஸ்காகவும் அறிவியல் காரணங்களுக்காகவும் கொண்டாடப்படும் படமாக இருந்துவருகிறது. இப்படத்திற்கு இயற்பியல் மற்றும் அறிவியல் ஆலோசனை வழங்கியவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கிப் தோர்ன் என்பது குறிப்பிடத்தக்கது
8. ஷின் காட்ஜில்லா
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய படமான காட்ஜில்லா படங்களின் வரிசையில் இது 31வது படமாக கருதப்படுகிறது. விமர்சகர்களால் கொண்டாடப்படும் இந்தப் படத்தை ஷின்ஜி ஹிகுச்சி, ஹிடேக்கி அன்னோ ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்
9. ஸ்நோபியர்சர்
பாரசைட் படத்தின் மூலம் நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இயக்குநர் போங் ஜுன் ஹோ இயக்கிய படம். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பிரஞ்ச் நாவலை தழுவி உருவாக்கப்பட்டது.
10. அண்டர் தி ஸ்கின்
2013 ஆம் ஆண்டு ஜொனாதன் கிளேஸரால் இயக்கப்பட்ட படம் அண்டர் தி ஸ்கின் படம். கிளேசர் மற்றும் வால்டர் காம்ப்பெல் எழுதிய அறிவியல் புனைகதை திரைப்படமாகும். இதில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஸ்காட்லாந்தில் ஆண்களை வேட்டையாடும் மற்றொரு உலகப் பெண்ணாக நடித்திருக்கிறார்.
Discussion about this post