ராகுல்காந்தி: மக்களுக்கு சேவை செய்வதற்கான, காங்கிரஸ் சிந்தாந்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
பிரதமர் மோடி: தொழில் மற்றும் சமூக சேவைக்கு அவர் ஆற்றிய பங்கு பாராட்டுக்குரியது, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கல்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின்: விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை பொய்த்தது; காங்கிரஸ் கட்சிக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதலும், அனுதாபமும்.
தமிழிசை சௌந்தராஜன்: சித்தப்பா.. நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்.
வைகோ: உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் அவர்கள் உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பாகும்!
ஜோதிமணி எம்.பி: இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாது அண்ணாச்சி; அதிர்ச்சியில் இருந்து விடுபடவே முடியவில்லை, உங்கள் புன்னகையும், தன்னம்பிக்கையும், உழைப்பும், கட்சியின் மீதான பற்றும் காலத்தால் அழியாதது.
ரஜினிகாந்த்: அருமை நண்பர் திரு.வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது, அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Discussion about this post