இங்குள்ள நீரின் வெப்பநிலை 120 டிகிரியில் இருந்து கிட்டத்தட்ட 200 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்துள்ளது. அதே சமயம் ஆற்றங்கரையின் சேறும் கூட நடக்க முடியாத அளவுக்கு சூடாக இருக்கிறது.
உப்பு கடல், நன்னீர் ஏரி, நிறம் மாறும் ஏரி, வழிமாறும் நதிகள் என்று பலவற்றை கேட்டிருப்போம். ஆனால் ஒரு நதியே கொதிக்கும் தண்ணீர்கொண்டு ஓடுகிறது என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.
தென் அமெரிக்காவில் அமேசான் காடு இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இது பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா (பிரான்ஸ்), கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுலாஆகிய நாடுகளில் பரவியுள்ளது. பெரு நாட்டின் அமேசானின் அடர்ந்த காட்டில் தான் இந்த வித்யாசமான நதி மறைந்துள்ளது. ஷனாய்-டிம்பிஷ்கா ஆற்றின் நீர் 200 டிகிரி பாரன்ஹீட் வரை சூடாக இருக்குமாம். உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமாகக் கருதுகின்றனர். இந்த வெந்நீருக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி உள்ளது என்றும் நம்புகின்றனர்.
லா பாம்பா அல்லது கொதிக்கும் நதி என்றும் அழைக்கப்படும் ஷனாய்-டிம்பிஷ்கா நதி சூரிய வெப்பத்தால் கொதிக்கும் என்ற கதையை தனது தாத்தா சொல்வதை ஆண்ட்ரேஸ் ருஸோன் என்ற சிறுவன் கேட்டுள்ளான்.
பின்னர் புவி இயற்பியலாளரான ருஸோன் அத்தகைய நதி இருக்கிறதா என்பதைக் கண்டறிய பெருவின் வெப்ப வரைபடத்தை உருவாக்கத் தொடங்கினார். அப்போது தான் பெருவில் உள்ள அமேசான் காட்டின் ஒரு பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பெரிய சூடான இடங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்த அமைப்பு வேறு எந்த கண்டத்திலும் இல்லாத ஒன்றாக இருந்துள்ளது.
கொதிக்கும் நதியை தானே பார்க்க அவர் நவம்பர் 2011 இல் மத்திய பெருவிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார் . மருத்துவ சாலைகள் அதிகம் இருந்த மயந்துயாசு என்ற சிறிய நகரத்தில் ஷனாய் நதி பாதுகாக்கப்படுவதை அவர் கண்டுபிடித்தார்.
இங்குள்ள நீரின் வெப்பநிலை 120 டிகிரியில் இருந்து கிட்டத்தட்ட 200 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்துள்ளது. அதே சமயம் ஆற்றங்கரையின் சேறும் கூட நடக்க முடியாத அளவுக்கு சூடாக இருந்தது. அந்த நதியில் தவறி விழுந்து இறந்த விலங்குகள் தண்ணீரில் மிதப்பதையும் அவர் கண்டார்.
Discussion about this post