அவதார் படத்தின் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. முதல் பாகம் போல இந்த பாகமும் ரசிகர்களை பிரமிக்க வைக்குமா என்பதை பார்க்கலாம்.
அழிந்துகொண்டு இருக்கும் உலகத்திற்கு தேவையான மாற்று சக்தி கொண்ட அதீத மதிப்புமிக்க யூனோப்டானியம் என்ற கனிமத்தை கைபற்ற, Alpha Century நட்சத்திர நிலவில் இருக்கும் அழகியல் சூழ்ந்த பண்டோரா என்ற இடத்திற்கு மனித இனம் தன்னுடைய ராணுவப்படையை அனுப்புகிறது. அதற்காக அங்கு வசிக்கும் நாவி இனம் போன்ற Hybrid உடலை உருவாக்கி, அதை மனித எண்ணத்தால் இயக்க திட்டமிடுகின்றனர். அந்த அவதார் மனிதனாக செல்லும் நாயகன் Jake Sully, நாவி இனத்தினரின் உணர்வை புரிந்துகொண்டு அவர்களை காப்பாற்றுகிறான். அத்துடன் அமெரிக்கை ராணுவத்தை பூமிக்கே அனுப்புகிறான். இறுதியில் Jake மனித உடலில் இருந்து நாவி இனம் மற்றும் இயற்கையின் உதவியுடன் Hybrid உடலிலேயே தஞ்சமடைகிறான். இதுவே அவதார் படத்தின் முதல் பாகம்.
இந்த கதைக்குள் ஜேம்ஸ் கேம்ரூனின் கற்பனை நினைத்துகூட பார்க்க முடியாத வகையில் இருந்தது. அதுவும் நாவி இனம், இயற்கை கொஞ்சும் காடுகள், அழகிய செடிகள், அற்புதம் செய்யும் மரம், ஆக்ரோச மிருகங்கள், தொங்கும் மலைகள், ஆகாயத்தில் இருந்து கொட்டும் அருவி என ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தது.
முதல் பாகத்தில் இருந்த அனைத்தையும் இரண்டாம் பாகத்தில் மறு உருவாக்கம் செய்துள்ளார் ஜேம்ஸ் கேம்ரூன்.
நாவி இனமாகவே மாறும் நாயகன் Jake, அந்த இனத்தின் தலைவி Neytiri-யுடன் சேர்ந்து வாழ்கிறார். அவர்களுக்கு நான்கு வாரிசுகள் அதற்கு சில பின்கதைகளும் உள்ளன. தந்தை என்பவர் காப்பவர், அனைத்து உயிர்களும் இயற்கை கொடுத்தது, அதை நேரம் வரும்போது திரும்ப கொடுக்க வேண்டும் என்பதே அவதார் The Way of Water.
இந்தப் படத்தின் கதை, பல அற்புதங்களும், அதிசயங்களும் கொண்ட பண்டோரா காட்டு பகுதியில் இருந்து தொடங்குகிறது. ஆகாயவாசிகளான மனிதர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிகொண்ட நாவி இனத்தினர் அமைதியாக வாழ்கின்றனர். நாயகன் Jake தன்னுடைய குடும்பமே உலகம் என எண்ணுகிறார். எந்த பிரச்னையும் இல்லாமல் செல்லும் பண்டோராவிற்கு மீண்டும் மனித இனத்தால் ஆபத்து வருகிறது. இந்த முறை இறந்து போன Colonel Miles உள்ளிட்ட ராணுவத்தினரே அவதாராக வருகின்றனர். அவர்களின் இலக்கில் நாயகன் Jake உள்ளான். அவர்களிடம் இருந்து தன்னையும், தன் இனத்தையும், குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை தனக்கே உரிய பிரமிப்பூட்டும் திரைக்கதையில் பிரமாண்டமாக படமாக்கியுள்ளார் ஜேம்ஸ் கேம்ரூன். .
இந்த முறை மனிர்களின் படையெடுப்பு என்பது பண்டோராவை காலனித்துவப் படுத்துவதற்காக அமைகிறது. அதிலும் பூமி அழிவை நோக்கியிருப்பதால் மனிதர்கள் வசிக்கும் இடமாக பண்டோராவை மாற்ற நினைக்கிறார்கள்.
அந்த படையில் வரும் Colonel Miles-யின் முதல் இலக்கு தானும், தன்னுடைய குடும்பமும்தான் என அறியும் நாயகன், தங்களை காப்பாற்றிகொள்ள வேறு இடத்திற்கு இடம்பெயர்கிறான். அதுவும் கடல்களால் சூழ்ந்த தீவி பகுதியில் உள்ள தலைவனிடம் தஞ்சமடைகிறான்.
இதனால் நெய்தல் நிலமான பண்டோராவின் அழகை இனி காண முடியாதோ என்ற எண்ணம் திரையரங்கில் உள்ளவர்களுக்கு தோன்றலாம். ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் கடலும் கடல் சார்ந்த இடங்களான நெய்தல் பகுதியில் கதை நகர்கிறது. அங்கு இடம்பெறும் காட்சிகளும் கொஞ்சமும் சலைத்து இல்லை. ஜேம்ஸ் கேம்ரூன் கற்பனை நீரிலும் பிரமிக்கிறது. கடல் மக்கள், அங்கு இருக்கும் உயிரினங்கள் என வேறுஒரு புது பரிமாணத்தை காட்டியுள்ளார் இயக்குனர். கடல்வாழ் உயிரினங்களுடன் கடல் வாழ்நாவி இனத்தினர் செய்யும் சாகசங்களும் பிரமிப்புதான்.
Jake பழிவாங்க Colonel Miles படையும், கடலில் வசிக்கும் அறியவகை உயிரினமான டூல்கன்ஸிடம் இருக்கும் மனித வயதை குறைக்கும் அற்புத திரவத்தை கைபற்ற அமெரிக்க நேவி படையும் உள்ளே நுழைகிறார்கள். அவர்களிடம் இருந்து டூல்கன்களையும், குடும்பத்தையும் Jake காப்பாற்றினான? பண்டோராவை காலனித்துவப்படுத்த வரும் படையை வென்றானா? என்ற இடத்தில் Avatar Way Of water முடிகிறது.
முதல் பாகம் நாவி இனம் தங்களையும், தங்கள் வளத்தையும் காப்பாற்ற போராடுவார்கள். இந்த முறை முழுக்க முழுக்க செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இருந்தாலும் சண்டை காட்சிகளுக்கும், பிரமாண்டத்திற்கும் பஞ்சமில்லை.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடலுக்குள்ளேயே நடைபெறுகிறது. அங்கு வசிக்கும் உயிரினங்களும், அதிசய சக்தி கொண்ட தாவரங்களும் அற்புதம். அதேபோல் ஆகாய வாசிகளுடனான சண்டைகளும் சாகசம்தான். குறிப்பாக 3டியில் படம் பார்க்கும் போது நாம் கடலுக்குள் இருக்கிறோமா என்ற உணர்வை தருகிறது.
அவதார் Wat of water படத்தில் பிரமிப்புகள் கொட்டிகிடந்தாலும், அதில் அரசியலும் உள்ளன. இதில் ராணுவத்தின் கொடூர முகம், யாராக இருந்தாலும் தங்கள் இடத்தில் வசிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியம் போன்ற விஷயங்கள் இடம்பெறுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அவதார் படத்தில் குறைகள் இல்லையா என்றால், இருக்கிறது என்பதுதான் பதில். ஆனால் அவற்றை ஜேம்ஸ் கேம்ரூனின் பிரமாண்டமும், நாவி மக்களின் உணர்வூகளும் மறக்கடிக்க செய்கின்றன.
இந்தப் படத்தில் ஆக்சனை காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர். அவரின் கற்பனைக்கு ஒளிப்பதிவு, இசை, கிராபிக்ஸ் என ஒவ்வொரு துறை தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் இல்லமால் ஜேம்ஸ் கேம்ரூனின் அவதார் முழுமையடையாது.
மொத்தத்தில் அவதார் Way of water ஹாலிவுட் பிரமாண்டத்துடனும், சாகசத்துடனும் எடுக்கப்பட்ட பக்கா தமிழ் செண்டிமெண்ட் திரைப்படம். ஆக்சன், பிரமாண்டத்தை மட்டும் எண்ணாமல் போனால், கூடுதலான செண்டிமெண்டையும் ரசித்து வரலாம்.
Discussion about this post