தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டார் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு.
இது குறித்து தெலுங்கு ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், “பொங்கலுக்கு, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய இரண்டு பெரிய தமிழ் படங்கள் திரைக்கு வரவுள்ளன. தமிழகத்தில், 800 திரைகள் உள்ளன. இதில் இரண்டு படங்களுக்கும் சம அளவில் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜய் நம்பர் 1 ஸ்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு அடுத்து அஜித் இருக்கிறார். அப்படி இருக்கையில் இரண்டு படங்களுக்கும் எப்படி சம எண்ணிக்கையில் திரைகளை ஒதுக்க முடியும்? ’துணிவு’ படத்தை விட ‘வாரிசு’ படத்திற்கு குறைந்தது 50 திரைகள் அதிகம் தேவை” என்றார்.
இதையடுத்து சென்னையில் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள ‘வாரிசு’, அதிக திரை ஒதுக்கீட்டிற்கு தகுதியானது என்பதை அழுத்தமாகக் கூறினார் தில் ராஜு.
Discussion about this post