காய்கறி ஏற்றி வந்தவர்கள் வியாபாரிகள் என கோயம்பேடு அங்காடியில் இருந்தவர்கள் மூலமாக 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்காடி மூன்றாக பிரிக்கப்பட்டு காய்கறி அங்காடி சென்னையின் புறநகர் பகுதியான திருமழிசைக்கும், பூ அங்காடி மாதவத்திற்கும் மாற்றப்பட்டது. ஆனால் விற்பனையாளர்களுக்கு தற்காலிக அங்காடி விற்பனையில் பல சிரமங்கள் இருப்பதாகவும் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் கோயம்பேடு சந்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதை தொடர்ந்து இன்று தமிழக துணை முதல்வர் கோயம்பேடு சந்தையை ஆய்வு மேற்கொண்டார்.
Discussion about this post