கர்நாடகாவில் 5 வயது சிறுமி ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டது குறித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
நோய்த்தடுப்பு குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) தலைவர், மருத்துவர் என்.கே அரோரா ” ஜிகா வைரஸ் பரவத் தொடங்கினால் இந்தியா அதனுடன் போராட தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசியது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகாவில் 5 வயது சிறுமி ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டது குறித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் “ ஜிகா வைரஸும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வைரஸ் என்பதால் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். இந்தியா ஜிகா வைரஸுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அப்படி ஜிகா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முதன்மை நாடுகளில் நாமும் ஒருவராக இருப்போம்.
ஜிகா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தால் அதன் தாக்கமும் தீவிரமாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் கருவில் உள்ள குழந்தையும் பாதிக்கப்படும். எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார். கர்நாடகாவை தொடர்ந்து புனேவிலும் ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜிகா வைரஸ் என்பது மக்களை அச்சுறுத்தும் கொடிய நோய் என 2016 ஆண்டு பிரேசில் அறிவித்தது. இது கொசுக்கள் மூலம் பரவுவது என்பதால் மக்களை எளிதாக தாக்கும் ஆற்றல் கொண்டது.
WHO இன் கூற்றுப்படி, தடிப்புகள், காய்ச்சல், வெண்படலம் , தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு மற்றும் தலைவலி ஆகியவை இந்நோயின் பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் பொதுவாக 2-7 நாட்கள் நீடிக்கும்.
1947 இல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளிலிருந்து பல ZVD வைரஸ் பரவல்கள் பதிவாகியுள்ளன. எனவேதான் இந்த வைரஸுக்கு ஜிகா வைரஸ் என்று பெயர் வந்தது.
Discussion about this post