கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், ஜே.இ.இ தேர்வு விவகாரத்து குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 7 மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
மேலும், நீட், ஜே.இ.இ தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
Discussion about this post