நாமக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும். இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்கள வருகிற 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே அஞசல் வழியில், நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.
Discussion about this post