2022 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் இணையத் தேடலில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம் மக்களால் அதிகம் தேடப்பட்ட தலைப்புகள் மற்றும் கேள்விகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதில் ‘what is’ என்ற பிரிவில் அக்னிபாத் திட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வருடம் வருடம் கூகுள் நிறுவனம் பல பிரிவுகளில் மக்களால் அதிக தேடப்பட்ட தலைப்பு மற்றும் கேள்விகளை வகைப்படுத்தி டாப் 10- யை வெளியிடுவர். அதில் Searchese,What is,how to,movies,near me,sports event,people,news event மற்றும் Recipes இடம்பெறும்.
அப்படி, இந்த ஆண்டுக்கான அதிக கூகுள் தேடலில் ‘what is’என்ற பிரிவில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்ந்த அக்னிபாத் திட்டம் முதலில் இடம்பெற்றுள்ளது. அக்னிபாத் திட்டம் என்பது மத்திய பாதுகாப்புத் துறையால் 2022 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இந்தியா ராணுவத்தில் பல பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றலாம். ஆனால் அது குறுக்கிய காலத்திற்கு மட்டுமே. இந்த திட்டம் இளைஞர்கள் இடையே பெரும் எதிர்ப்பை பெற்றது. இத்திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஜூன் 12 ஆம் தேதியில் தொடங்கி 18 தேதி வரை அக்னிபாத் திட்டம் என்றால் என்ன என்ற கேள்வி இணையத்தை ஆழ்ந்துள்ளது. கூகுள் விவரங்கள் படி, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தெலுங்கான இந்த திட்டத்தை தேடியதில் முதல் இடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சண்டிகர், சிக்கிம், நாகாலாந்து மற்றும் கர்நாடக முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
தலைநகர் டெல்லி 7வது இடத்திலும், இத்திட்டத்திற்கு அதிக எதிர்ப்பு கிளம்பிய பீகார் மாநிலம் 21வது இடத்திலும், உத்திர பிரதேசம் 22வது இடத்திலும் உள்ளனர்.
தமிழ்நாடு 25வது இடத்தில் உள்ளது. கடைசி மூன்று இடங்களில் ராஜஸ்தான், அசாம் மற்றும் சத்தீஸ்கர் இடம்பெற்றுள்ளன.
Discussion about this post