புதுச்சேரியில் கலால் துறை துணை ஆணையர் சுதாகரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் மோசடி.
புதுச்சேரி காராமணி குப்பம் பகுதியில் அனுபமா ஒயின்ஸ் மொத்த விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கையெழுத்தை போலியாக உருவாக்கி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கொள்முதல் செய்து புதுச்சேரியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
அந்த நிறுவனம் தனது மதுபான விற்பனை லைசன்ஸ்-ஐ புதுப்பிக்க கலால் துறைக்கு வரும் பொழுது துணை ஆணையரின் கையெழுத்தில் முரண்பாடு இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமங்களை சோதனை செய்ததில் 2 முறை போலியாக 10 லட்ச ரூபாய்க்கு கொள்முதல் செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கலால் உரிமத்தை ரத்து செய்து மதுபான குடோனிற்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.
இந்த சம்பவம் தொடர்பாககலால் துறை துணை ஆணையர் சுதாகர் கூறுகையில், “மதுவுக்கு புகழ் பெற்றது புதுச்சேரி. பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்து புதுச்சேரியில் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. அதேபோல் சாராயம் மற்றும் கள் விற்பனைக்கு புதுச்சேரியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கள், சாராயத்திற்கு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது. அயல்நாட்டு மது மற்றும் உள்நாட்டு மதுபானங்களுக்கு 250 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சுற்றுலா லைசன்ஸ் என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட ஓட்டல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வருகின்றனர். புதுச்சேரியில் முக்கிய வருமானமாக கலால் வரி உள்ளது. இதன் காரணமாக பல மாநில மற்றும் நாடுகளை சேர்ந்த மதுபானங்கள் புதுச்சேரியில் விற்க கலால் துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வரை 1500 மதுபான வகைகள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் தமிழகப் பகுதிக்கும் அண்டை மாநிலங்களுக்கும் கடத்தல் என்பது நடைபெற்று வருகிறது. அண்மையில் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மதுபானங்கள் புதுச்சேரியில் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் போது தமிழக-புதுச்சேரி எல்லையில் பிடிபட்டது.இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி போலீசார் இணைந்து மதுக்கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் அனுபமா ஒயின்ஸ் என்ற நிறுவனம் கலால் துறை துணை ஆணையரின் கையெழுத்து இட்டு போலி ஆவணங்கள் தயாரித்து இரண்டு முறை மது இறக்குமதிக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இது தற்பொழுது தெரியவந்ததை அடுத்து துணை ஆணையர் சுதாகர் சிபிசிஐடி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் வருவாயை இழக்க செய்யும் வகையில் போலியான ஆவணங்கள் தயாரித்ததாக குற்றச்சாட்டி தற்காலிகமாக மது விற்பனைக்கான லைசன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மது விற்பனை செய்யும் நிலையம் மற்றும் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post