தஞ்சாவூரில் நடைபெற்ற கண்காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் தாங்கள் தயாரித்த ரோபோவை காட்சிப்படுத்தினர்.
தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு, கலை, அறிவியல் என 21 வகையான நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தது.
இதில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணத்தினால் தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வுகள் நடக்காமல் இருந்ததை அடுத்து இந்த ஆண்டு நடந்த இந்த நிகழ்வுகளில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிகொணர்ந்து, பரிசுகளையும் பெற்றனர்.
இதில் முதல் பரிசாக 3,000, இரண்டாம்பரிசாக 2,000 மூன்றாம் பரிசாக 1,000 என மாணவர்களுக்கு வழங்கபட்டது..அதிக புள்ளிகள் எடுத்த பள்ளிகளுக்கு 10,000 ரூபாய்க்கானநலத்திட்ட உதவிகளும்பிரிஸ்ட் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் அறிவியல் கண்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்ட திருச்சி மணப்பாறை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வரும் லிங்கேஷ் குமார் மற்றும் கோகுல் ஆகிய அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் நோயாளிகள் அவசர காலங்களில் மருத்துவர்கள் அணுகவும், உணவுகளை ரோபோக்கள் வந்து நோயாளிகளுக்கு நேரடியாக தருவது போன்ற புதிய வகையான மென்பொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.
அறிவியல் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ள இவர்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக உதவுவதற்கு இந்த ஒரு மென்பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த மென்பொருளை உருவாக்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் பயிற்சி பெற்று சிறு வயதிலேயே இந்த ஒரு தொழில்நுட்பத்தை ப்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.
மருத்துவமனையில் நோயாளிகள் அவசர காலங்களில் உணவு மற்றும் மற்ற உதவிகளை செவிலியரிடமும் தெரிவிப்பதற்காக இரண்டு பொத்தான்கள் அடங்கிய அமைப்பை படுக்கை அறையில் அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் நாம் எதை தேர்ந்தெடுக்கிறோமோ உதாரணத்திற்கு உணவு வேண்டும் என அழுத்தினால் அது குறுஞ்செய்தியாக செவிலியரின் செல்போனுக்கு செல்வது போன்றும், ரோபோக்களை நேரடியாக ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு நோயாளிகளுக்கு தேவையான வசதிகளையும் செய்வதற்கும், கேட்டு அறிந்து கொள்வதற்கும் 3d முறையில் மருத்துவமனையை உருவாக்கி அதில் ப்ரோக்ராமிங் செய்துள்ளார்கள்.
Discussion about this post