தனியார் ஊடகங்கள் இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பது குறித்த `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவானது.
இதேபோல குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக எஞ்சிய 93 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது
முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இன்று நடைபெற்ற தேர்தலில், மாலை 5 மணி நிலவரப்படி 58.68% வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில், தேசிய ஊடகங்கள் இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பது குறித்த `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன் விபரம் பின்வருமாறு:-
BARC வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 35-40 இடங்களிலும், காங்கிரஸ் 20-25 இடங்களிலும், ஆம் ஆத்மி 0-3 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
NEWSX வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 32 முதல் 40 இடங்களிலும், காங்கிரஸ் 27 முதல் 34 இடங்களும், வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு எந்த இடங்களிலும் வெற்றி பெறாது என கணிக்கப்பட்டுள்ளது.
ETG வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 38 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BARC வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 35 முதல் 39 இடங்களிலும், காங்கிரஸ் 28 முதல் 33 இடங்களிலும், ஆம் ஆத்மி 0 முதல் 1 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
TV9 வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக 125 தொகுதிகள் முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 40 முதல் 50 இடங்கள் வரையிலும், ஆம் ஆத்மி கட்சி 3 முதல் 5 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் குஜராத்தில் பாஜக 117 இடங்கள் முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்கள் முதல் 51 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 6 முதல் 13 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பதாகவும், இமாச்சல் பிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே இழுப்பறி நிலவினாலும் கூட, பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்கும் எனவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Discussion about this post